பிக் பாஸ் 8
பிக் பாஸ் சீசன் 8 கடந்த வாரம் பிரமாண்டமாக துவங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் இருக்கிறது என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாமினேஷன் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் வாங்கிய சாச்சனா வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து கேப்டன் டாஸ்க் நடைபெற்றது இதிலிருந்து தர்ஷிகா வெற்றிபெற்று, முதல் வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்படி தான் முதல் நாள் பிக் பாஸ் 8 சென்றது.
கண்கலங்கிய பெண் போட்டியாளர்
இந்த நிலையில், இரண்டாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. இதில், ஆண்கள் அணியில் இருந்து ஒரு பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு ஒருவரும் விளையாட வரவேண்டும், அவரை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி, ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் செக் வைத்து பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான பேச்சு வார்த்தை நடந்த நிலையில், சுனிதாவிற்கும் ஜாக்லினிற்கும் இடையே கடும் வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பேச்சுவார்த்தையில் இருந்து எழுந்து சென்று ஜாக்குலின் தனியாக கண்கலங்கி அழுகிறார். முதல் ப்ரோமோ வீடியோ..