Wednesday, September 18, 2024
Homeசினிமாபிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள்


திரையுலகில் பிரபல ஜோடியாக வளம் வருபவர்கள் ரியாஸ் கான் மற்றும் அவர் மனைவி உமா ரியாஸ் கான். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர்.

ஷாரிக்



விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ஷாரிக். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார்.
மேலும்,பென்சில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஷாரிக், மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவர் காதலை பெற்றோரிடம் சொல்லி இருவீட்டாரின் சம்மதத்தை பெற்று நேற்று அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை நடத்தினர்.

திருமணம் 

இந்த திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். இது ரியாஸ் கான்,குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதால், மெஹந்தி பங்ஷன், ஹல்தி பங்ஷன் என ஆட்டம் பாட்டத்துடன் சில நாட்களாக கொண்டாடி வந்தனர்.


இந்த நிலையில் தற்போது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் | Bigg Boss Shariq Hassan Marriage Photos

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் | Bigg Boss Shariq Hassan Marriage Photos

பிக் பாஸ் ஷாரிக் திருமணம் முடிந்தது.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் | Bigg Boss Shariq Hassan Marriage Photos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments