பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. ஷோவில் ஆண்கள் vs பெண்கள் என போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதுவே பல்வேறு பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்து இருக்கிறது.
தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதியும் போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். கமல்ஹாசன் போல பொறுமையாக பேசாமல் அதிரடியாக பேசி வருகிறார் விஜய் சேதுபதி. கடந்த வாரம் ஷோவில் இருந்து அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த வார எலிமினேஷன்
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்குலின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் பெண்கள் டீமில் இருந்து தான் ஒருவர் வெளியேறப்போவதாக தகவல் வந்திருக்கிறது.
தர்ஷா, பவித்ரா, சவுந்தர்யா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எலிமினேஷன் யார் என்பதை விஜய் சேதுபதி அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.