விஜய் டிவியின் பிக் பாஸ் 8வது சீசன் தொடக்க விழா இன்று மாலை ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ஷூட்டிங் நேற்று தொடங்கிவிட்டது.
நடிகர் விஜய் சேதுபதி புது பிக் பாஸ் வீட்டை சுற்றி காட்டும் பகுதி மற்றும் அதனை தொடர்ந்து போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்புவதும் ஷூட் செய்யப்பட்டு இருக்கிறது.
18 போட்டியாளர்கள்
தயாரிப்பாளர் ரவீந்தர் தொடங்கி கானா, ஜெப்ரி, தர்ஷா குப்தா, RJ ஆனந்தி வரை மொத்தம் 18 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.
உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்த காமெடியன் TSK, சவுண்டு சரோஜா நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் போன்றவர்கள் போட்டியாளராக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.