பிக் பாஸ் 8
நேற்று மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது.
ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, பவித்ரா, தர்ஷிகா, தீபக், சத்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் வந்தவுடனே, வீட்டில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் இருந்து தான் போட்டியிட போகிறார்கள் என பிக் பாஸ் கூறிவிட்டார்.
அதற்கு ஏற்றாற்போல் வீட்டில் ஒரு பகுதி பெண்களும், மற்றொரு பகுதி ஆண்களும் பிரித்துக்கொண்டனர். நேற்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நேரத்தில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு எலிமினேஷன் இருக்கிறது என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
முதல் எலிமினேஷன்
இந்த நிலையில் பிக் பாஸ் 8 முதல் எலிமினேஷன் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இளம் நடிகை சாச்சனா தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமான சாச்சனா, பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கிய நிலையில், ஒரே நாளில் அவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.