பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே, தமிழ் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கும் தொகுப்பாளினி.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் எல்லா ஹிட் ஷோக்களையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கும் ஒரு தொகுப்பாளினி இவர்.
மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே இருவரும் ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது, நிகழ்ச்சியே கலகலப்பாக செல்லும்.
இவர்கள் சூப்பர் சிங்கரில் செய்யும் அட்டகாசங்களை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
சம்பளம்
தொகுப்பாளினி பிரியங்கா இப்போது குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு சமையலில் கலக்கி வருகிறார்.
இவர் தான் 5வது சீசனின் வெற்றியாளர் என கூறப்படுகிறது, இறுதி நிகழ்ச்சியில் இது உண்மை என்பதை காண்போம். இன்னொரு பக்கம் மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை சென்றுகொண்டிருக்கிறது, எப்போது முடியும் என தெரியவில்லை.
இந்த நிலையில் பிரியங்கா குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளம் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. பிரியங்கா குக் வித் கோமாளி 5 ஒரு ஷோவிற்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.