ஹேமா கமிட்டி அறிக்கை
மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்ந்து, பல நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது பெண்கள் அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி புகார் கொடுத்து வருகின்றனர்.
டான்ஸ் மாஸ்டர் ஜானி
இந்த நிலையில், நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். அதில், 2019-ல் ஜானியுடன் பணிபுரிந்த போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.
அதன்படி,ஆந்திர மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜானி திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதோ’ என்ற ஒரு பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
மேலும், ரவுடி பேபி, ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.