பிரபல நடிகர்
பிரபலங்கள் என்றாலே மக்கள் எப்போதும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள்.
அவர்களுக்கு திருமணம் என்றால் ஒவ்வொரு விஷயத்திலும் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து அதை தங்களது திருமண விசேஷத்திலும் செய்ய ஆசைப்படுவார்கள்.
அப்படி பல வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல நடிகருக்கு திருமணம் நடக்க பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது.
அந்த பிரபல நடிகரின் மனைவி அணிந்திருந்த திருமண புடவை பற்றிய தகவல் தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
யார் அவர்
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக தன்னை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு வருபவர் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்.
கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி ஜுனியர் என்டிஆருக்கும், லட்சுமி பிரணதிக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது வெளியான தகவல் என்னவென்றால், இவர்களின் திருமணத்திற்கு மொத்த ஆன பட்ஜெட் சுமார் ரூ. 100 கோடியாம்.
அவரது மனைவி லட்சுமி ரூ. 1 கோடி மதிப்பிலான புடவையில் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணம் நடந்த அந்த பிரம்மாண்டமான மணிமண்டபத்தை அலங்கரிக்க சுமார் ரூ. 18 கோடி செலவு செய்யப்பட்டதாம்.
திருமணத்திற்கு செல்வழிக்கப்பட்ட அனைத்து பணத்தையும் தவிர 3000 நட்சத்திர விருந்தினர்களும் அவரது திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.