வெண்ணிற ஆடை மூர்த்தி
தமிழ் சினிமாவில் 3 தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
எம்ஜிஆர், சிவாஜி என தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் என பல இளம் நடிகர்களோடு நடித்துள்ளார்.
காமெடி நடிகர்களாக வலம் வந்தவர்களிடையில் தனியாக தெரிந்தவர் இவர், அதோடு வில்லனாகவும் அசத்தியிருக்கிறார்.
இப்போது இரட்டை வசனங்கள் அதிகம் டிரெண்ட், ஆனால் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசும் வசனங்கள் அதிகமான இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும்.
மனைவி யார்
வயது மூப்பு காரணமாக இப்போதெல்லாம் நடிக்காமல் இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது, அவரது மனைவியும் நடிகை தானாம்.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல நடிகை மணிபாலா தான். மணிபாலா, ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் நடிகை சுஹாசினி நடித்த சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.