மீரா நந்தன்
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீரா நந்தன். இவர் மலையாளத்தில் வெளிவந்த முல்லா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2009ஆம் ஆண்டு வெளிவந்த வால்மீகி திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். பின் ஆதியுடன் இணைந்து அய்யனார் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
2017ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். 6 வருடங்கள் கழித்து 2023ஆம் ஆண்டு வெளிவந்த ஜெஸ்னா எனும் படத்தில் நடித்திருந்தார்.
திருமணம்
இந்த நிலையில், நடிகை மீரா நந்தனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. Beau Sreeju என்பவருடன் நடிகை மீரா நந்தனுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..