நடிகர் பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் பிரபாஸ். குறிப்பாக பாகுபலி திரைப்படத்திற்கு பின் பான் இந்தியா ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.
[VKF6KD ]
அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. இப்படம் வருகிற 27ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரபாஸுக்கு ஜோடி
பிரபாஸ் கைவசம் உள்ள திரைப்படங்களில் ஒன்று ராஜா சாப். மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக இவர் நடிப்பில் தங்களான் திரைப்படம் வெளிவரவுள்ளது. சீயான் விக்ரம் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.