நடிகர் பிரபாஸ்
பிரபாஸ் தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் கல்கி 2898 AD திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது ராஜா சாப் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் ஸ்பிரிட். இப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.
இவருடைய இயக்கத்தில் கடந்த ஆண்டு அனிமல் திரைப்படம் வெளிவந்தது. இதற்கு முன் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியா நடிகர்
இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ள ஸ்பிரிட் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக தென் கொரியா நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இவர் தென் கொரியாவில் மட்டுமின்றி இந்தியவிலும் மிகவும் பிரபலமாவார். ஆக்ஷன் காட்சியில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தும் இவரை ரசிகர்கள் டான் லீ என செல்லமாக அழைப்பார்கள்.