ராஜமௌலி
மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என பல பிரமாண்ட திரைப்படங்களை சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார்.
ராஜமௌலி திரைப்படம் என்றால் உடனடியாக ஓகே சொல்லும் நடிகர், நடிகைகளை தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், அவருடைய படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் நிராகரித்துள்ளாராம்.
வாய்ப்பை நிராகரித்த நடிகை?
அவர் வேறு யாருமில்லை கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை திரிஷா தான்.
2010ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் சுனில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் மரியாதை ராமண்ணா.
இப்படத்தில் சுனிலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம்.
ஆனால், சுனில் காமெடி நடிகர் என்பதால் தன்னுடைய எதிர்காலம் கருதி திரிஷா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.