Tuesday, March 18, 2025
Homeசினிமாபிரம்மாண்டமாக உருவாகும் குட் பேட் அக்லி! மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்..

பிரம்மாண்டமாக உருவாகும் குட் பேட் அக்லி! மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்..


குட் பேட் அக்லி

நடிகர் அஜித்தின் ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்டு நடித்துள்ளார்.

இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதலில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக இருந்த நிலையில், சில காரணங்களால் அவர் வெளியேறினார்.

அவருக்கு பதிலாக இப்படத்திற்கு இசையமைக்க ஜிவி பிரகாஷ் கமிட் ஆனார். கிரீடம் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து அஜித்தின் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

ஜி.வி கொடுத்த அப்டேட்

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் குட் பேட் அக்லி குறித்து மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் “Started composing for the most special project today …. God Bless U.. Fire starts NOW” என அவர் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இன்று முதல் குட் பேட் அக்லி படத்தின் இசையமைக்கும் வேலை துவங்கியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும் குட் பேட் அக்லி! மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்.. | Good Bad Ugly Update By Gv Prakash

பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வெறித்தனமாக அமைக்கும் ஜி.வி. பிரகாஷ், கண்டிப்பாக GBU படத்தில் சம்பவம் பண்ண போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments