விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன, அது அத்தனையுமே மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளது.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் Mr & Mrs Chinnathirai. ரியல் ஜோடிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி முதன்முதலில் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன் நடுவர்களாக கோபிநாத், தேவதர்ஷினி மற்றும் விஜயலட்சுமி கலந்துகொண்டனர். முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து 4 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது.
புதிய சீசன்
இந்த நிலையில் Mr & Mrs Chinnathirai ஷோவின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்த 5வது சீசன் குறித்த புரொமோக்கள் வெளியாக இப்போது நடுவர்கள் இடம்பெறும் புரொமோ வெளியாகியுள்ளது.
இந்த 5வது சீசனிற்கு கோபிநாத் மற்றும் நடிகை ராதா நடுவர்களாக கலந்துகொள்ள உள்ளனர். இதோ அந்த புரொமோ,