சரிகமப 4
தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழின் சரிகமப.
இதுவரை வெற்றிகரமாக 3 சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி 4வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.
சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த சரிகமப சீசன் 4. பெரியவர்கள், சிறியவர்கள் என 2 சீசன்களை சேர்த்து இந்த 4வது சீசன் மூலம் 8 முறையாக சரிகமப சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.
ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் கார்த்திக் ஏற்கெனவே நிறைய சீசன்களின் நடுவர்களாக இருந்துவரும் நிலையில் இந்த பெரியவர்களுக்கான 4வது சீசன் மூலம் புதிய நடுவராக களமிறங்கியுள்ளார் பாடகி சைந்தவி.
Grand Finale
4வது சீசன் வெற்றிகரமாக நடந்துவரும் நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் அக்டோபர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் சரிகமப சீசன் 4 Grand Finale நடக்க இருக்கிறதாம்.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் நடுவராக பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ள இருக்கிறார்.