விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோர் இடையே நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் நெட்டிசன்கள் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் மீது தவறு என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
சர்ச்சை பெரிய அளவில் வெடித்து தன்னை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் பிரியங்கா இதுவரை தனது தரப்பு விளக்கத்தை இதுவரை வெளியிடாமல் இருக்கிறார்.
வீடியோ
பிரியங்காவின் பழைய வீடியோக்கள் பலவற்றை நெட்டிசன்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அவர் மணிமேகலையை பல இடங்களில் சீண்டிய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
#PriyankaDeshpande planned and manipulated infront of everyone to make #Manimegalai dummy piece.
See #Priyanka happiness when #Manimegalai was dismissed from anchor. Look at the dance and face reaction. Feeling bad for #Manimegalai it’s not a joke or humor, #CookuWithComali is… pic.twitter.com/Pj0vw1eNMz— Voice of Common Man | Human Being (@ungal_nan_) September 15, 2024
நோஸ்கட் கொடுத்த நடிகை
இது ஒருபுறம் இருக்க பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் நடிகை நிகிலா விமல் வந்திருந்தபோது அவரிடம் பிரியங்கா மலையாளத்தில் பேசுகிறார்.
அவர் நீண்ட நேரம் பேசி முடித்தபிறகு, ‘எனக்கு நன்றாகவே தமிழ் தெரியும், நீங்க பேசுற மலையாளம் தான் புரியவில்லை’ என சொல்லி நோஸ் கட் கொடுத்து இருக்கிறார்.
அந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#Nikhila Rocked 😎#Priyanka Shocked 😂
The same way if everyone gives back this #PriyankaDeshpande will shut her mouthNow #Manimegalai exposed her completely
— sherif vijay (@VijaySherif) September 17, 2024