Monday, December 9, 2024
Homeசினிமாபிரியங்கா, மணிமேகலை பிரச்சனை குறித்து ஓபனாக பேசிய அறந்தாங்கி நிஷா... அதை செய்யாதீங்க

பிரியங்கா, மணிமேகலை பிரச்சனை குறித்து ஓபனாக பேசிய அறந்தாங்கி நிஷா… அதை செய்யாதீங்க


பிரியங்கா-மணிமேகலை

சினிமா சம்பந்தமாக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் அது வைரலாகிவிடும்.

அப்படி தான் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புகழ் மணிமேகலை ஒரு வீடியோ வெளியிட செம வைரலானது.

தான் தொகுப்பாளராக 5வது சீசனில் கலந்துகொண்டாலும் தன் வேலையை செய்ய விடாமல் போட்டியாளராக வந்த ஒரு பிரபல தொகுப்பாளர் தன் வேலையை கெடுப்பதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணத்தையும் கூறியிருந்தார்.

அன்றில் இருந்து வீடியோ போட்ட அவர் அவரது வேலையை கவனிக்கிறார், ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் நிறைய கேள்வி பலரும் கேட்டு வருகிறார்கள்.


அறந்தாங்கி நிஷா

கோவையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அறந்தாங்கி நிஷாவிடம், மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், சம்பவ தினத்தன்று நான் அங்கே இல்லை, என்ன நடந்தது என்று தெரியாமல் இரு தரப்பிலும் விசாரிக்காமல் கருத்துக்களை கூற முடியாது.

ஒரு தொழில்சார்ந்து ஒருவர் மீது குறை கூறப்பட்டால் அதைப்பற்றி மட்டுமே பேச வேண்டும்.

அவர்களது சொந்த விஷயங்களை வைத்து அந்த பெண்ணை அழிவுப்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

பிரியங்கா, மணிமேகலை பிரச்சனை குறித்து ஓபனாக பேசிய அறந்தாங்கி நிஷா... அதை செய்யாதீங்க | Aranthangi Nisha About Priyanka Manimegalai Issue

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments