பிரேம்ஜி
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 – ஆம் ஆண்டு வெளி வந்த சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து என்ன கொடுமை சார் இது என்ற வசனம் மூலம் பிரபலமானவர்.
இவர் திருமண வயதை கடந்த போதும், திருமணம் செய்து கொள்ளாமல், பேச்சுலராக இருந்த வந்தார். பின்னர் ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பிரேம்ஜி வீட்டில் விசேஷம்
இந்த திருமணத்தில் ஜெய்,வைபவ், மிர்ச்சி சிவா, சங்கீதா,க்ரிஷ் போன்ற பிரேம்ஜியின் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். பிரேம்ஜிக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தாலி பிரித்துக் கோர்க்கும் விஷேசம் நடந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பிரேம்ஜியின் மனைவி இந்து அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, முருகப்பெருமானால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம் என்றும் அன்பு, விசுவாசம் மற்றும் இறைவனின் பாதுகாப்போடு, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றனர்.