Monday, March 17, 2025
Homeசினிமாபிறக்கும் போது முஸ்லீம், இப்போது கிறிஸ்டியன்.. தனது மதம் மாற்றம் குறித்து ஓபனாக பேசிய நடிகை...

பிறக்கும் போது முஸ்லீம், இப்போது கிறிஸ்டியன்.. தனது மதம் மாற்றம் குறித்து ஓபனாக பேசிய நடிகை ரெஜினா


நடிகை ரெஜினா

மாடலிங் துறையில் கலக்கி பின் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர்களில் ஒருவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து மாநகரம், சரவணன் இயக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா, தலைவி, காஞ்சனா 3, கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்து அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மத மாற்றம்


அண்மையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா மதம் மாறியதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர், என் அம்மா கிறிஸ்டியன், என் அப்பா இஸ்லாம், இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

பிறக்கும் போது முஸ்லீம், இப்போது கிறிஸ்டியன்.. தனது மதம் மாற்றம் குறித்து ஓபனாக பேசிய நடிகை ரெஜினா | Regina Speaks About Her Religious Conversion

நான் முஸ்லீமாகத் தான் பிறந்தேன், 6 வருடங்கள் என்ற பெயர் ரெஜினா இல்லை, வேறு பெயர் தான். என் அம்மா, அப்பா விவாகரத்தான பிறகு அம்மா நான் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் அதுதான் சரியாக இருக்கும் என்றார்.

அவருக்கு இஸ்லாம் மதம் தெரியாது என்பதால் அவர்கள் என்னை கிறிஸ்டியனாக வளர்த்து அந்த மதத்தை பின்பற்ற சொன்னார்கள், அதன்பின்பே ஞானஸ்தானம் பெற்று பைபிள் படித்தேன் என்றார். 

பிறக்கும் போது முஸ்லீம், இப்போது கிறிஸ்டியன்.. தனது மதம் மாற்றம் குறித்து ஓபனாக பேசிய நடிகை ரெஜினா | Regina Speaks About Her Religious Conversion

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments