தனுஷ்
நடிகர் தனுஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர். நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்தும், இயக்கியும் வெளிவந்த படம் ராயன். இது நடிகர் தனுஷின் 50-வது படமாகும். இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதை தொடர்ந்து, தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51-வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைகிறார். இது ஒரு பான் இந்திய படமாக உருவாகிறது.
அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் இந்த படத்துக்கு குபேரா என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.
போஸ்டர் வெளியீடு
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்தநிலையில், இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் தனுஷுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்து கொண்டிருக்கும் குபேரா படத்தின் போஸ்டர்ரை இயக்குனர் சேகர் வெளியுட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது.
இதோ அந்த போஸ்டர்..