வித்யூராமன்
தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்களின் வாரிசுகள் களமிறங்கியுள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை வித்யூலேகா ராமன்.
நடிகர் மோகன் ராமனின் மகளான இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தா தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
பின் தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச் சட்டை, மாஸ், பஞ்சு மிட்டாய் என தொடர்ந்து நடித்து வந்தார். தமிழை போல தெலுங்கிலும் அறிமுகமாகி தொடர்ந்து படங்கள் நடித்த வண்ணம் இருந்தார்.
புதிய கார்
பிஸியாக நடித்துக்கொண்டு வந்தவர் 2020ம் ஆண்டு உறவினர்கள் சூழ சஞ்சய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் வித்யூலேகா ராமனை அவ்வளவாக படங்களில் காணவில்லை, ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகை வித்யூராமன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தனது கணவர் மற்றும் அப்பா, அம்மாவுடன் அனைவருடனும் புதிய காருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.