ஆஹா கல்யாணம்
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 260 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்களுடன் திருமணம் நடக்கிறது.
இப்போதைக்கு இரண்டு ஜோடிகளின் திருமணம் முடிந்துள்ளது, கடைசி ஜோடியின் திருமணம் எப்போது, எப்படி நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
புதிய தொடர்
தற்போது இந்த தொடரில் மஹா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அக்ஷயா குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது இவர் இன்னொரு புதிய தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில் Kantara என பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
இந்த விஷயம் வெளியானதும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.