எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல்.
கோலங்கள் என்ற தொடரை கொடுத்த திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் நடித்த அனைவருமே மக்களிடம் மிகவும் பிரபலம்.
தற்போது தொடர் முடிந்துவிட ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.
சமீபத்தில் இந்த தொடரில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விமல் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் தொடரில் எண்ட்ரி கொடுத்த தகவல் வெளிவந்தது.
மதுமிதா தொடர்
இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான மதுமிதா குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம்.
ஜீ தமிழில் விரைவில் தொடங்கப்போகும் தொடரில் தான் முக்கிய நாயகியாக நடிக்க மதுமிதா கமிட்டாகியுள்ளாராம். இந்த புதிய சீரியலின் படப்பிடிப்பு இன்னும் சில வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.