சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் சைத்ரா லதா ரெட்டி. அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
டிஆர்பியில் முன்னணி தொடர்களில் ஒன்று கயல் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்க சைத்ரா லதாவின் நடிப்பும் ஒரு முக்கிய காரணம்.
புது தொழில்
தற்போது சைத்ரா ரெட்டி ஒரு புது தொழிலை தொடங்கி இருக்கிறார். அவர் பெங்களூரில் ஒரு புது துணி கடையை திறக்க இருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
அது பற்றிய அறிவிப்பை அழகிய சேலையில் வீடியோ வெளியிட்டு சைத்ரா ரெட்டி அறிவித்து இருக்கிறார். நீங்களே பாருங்க.