ஒரு நல்ல படத்தை எடுத்து அதனை வெளியிட்டு மக்கள் மத்தியில் அந்த படம் நல்ல வரவேற்பை பெரும் வரை இயக்குனர்கள், நடிகர்கள் என பலரின் உழைப்பும், திறமையும் அடங்கி இருக்கும்.
ஆனால், அவை அனைத்தையும் மிக சுலபமாக அழிக்கும் வகையில் புது படங்கள் திரையரங்கில் வெளியான அந்த நாளிலே திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து உடனே இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக பலர் செய்து வருகின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ்
இதனால் மக்கள் தியேட்டருக்கு போவது குறைந்து வரும் நிலையில், புது படங்களை வீடியோ எடுத்து அதனை பதிவிடும் தமிழ் ராக்கர்ஸ் டீம் அட்மின்கள் இருவர் கொச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் வெளிவந்த வேட்டையன் படம் வெளிவந்த சில மணி நேரத்திலே இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதை தொடர்ந்து, மலையாள படமான ‘அஜயண்டே ரண்டம் மோஷனம்’ சட்டத்திற்கு புறம்பான காப்பியையும் டெலிகிராமில் ரிலீஸ் செய்ததாக கூறி இருவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் குமார், குமரேசன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் பெங்களூரில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளனர்.