செய்தி வாசிப்பாளர்
சினிமாவில் நடிப்பவர்களை தாண்டி மக்களிடம் பிரபலமானவர்கள் பலர். அப்படி தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பதன் மூலம் மக்களிடம் கவனம் பெற்றவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அனிதா சம்பத், ஒரு காலத்தில் ப்ரியா பவானி ஷங்கர், சரண்யா துரடி என பலரை கூறலாம்..
அப்படி பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக களமிறங்கி மக்களிடம் ரீச் பெற்றவர் சௌந்தர்யா அமுதமொழி. இவர் கடந்த சில வருடங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
ஆனால் இவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி வெளியாக அனைவருமே தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.