Monday, February 17, 2025
Homeசினிமாபுஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா

புஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா


புஷ்பா

பான் இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2.


சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தனர். ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் சுமார்
ரூ. 1110 கோடி வரை வசூல் செய்துள்ளது.

யார் தெரியுமா 

ஆனால், இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம்பிடித்த அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபு தானாம்.  நெகடிவ் கதாபாத்திரம் தனக்கு வேண்டாம் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.

மேலும், புஷ்பா படத்தில் கவனம் பெற்ற ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சமந்தாவிடம் தான் கேட்கப்பட்டதாம் ஆனால், கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டாராம்.

புஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா | Stars Who Rejected To Act In Pushpa

அதே போல், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் ரோலில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டதாம் ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் மறுத்துவிட்டாராம். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments