புஷ்பா
கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா 1. இப்படத்தை பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். சமந்தாவின் நடனம் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
சமந்தாவிற்கு பதிலாக இவரா
புஷ்பா 1 படத்தில் நடிகை சமந்தா நடனமாடியது போலவே, புஷ்பா 2 படத்திலும் ஒரு பாடல் இருக்கிறது என தகவல் வெளிவந்தது. ஆனால், இம்முறை நடிகை சமந்தா அந்த பாடலுக்கு நடனமாடவில்லை, அவருக்கு பதிலாக வேறொரு நடிகை தான் நடமாடுகிறார் என கூறப்பட்டது.
ஸ்ரீலா, பூஜா ஹெக்டே, நோரா பதேகீ உள்ளிட்ட பலருடைய பெயர்களும் இதில் அடிபட்ட நிலையில், தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக த்ரிப்தி டிம்ரி தான் புஷ்பா 2 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் நடிகை சமந்தாவின் நடனம் எப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோ, அதே போல் புஷ்பா 2 படத்தில் த்ரிப்தி டிம்ரியின் நடனம் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு முழு வீச்சில் வேலைகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.