சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து இருந்த புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகம் அதை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.
சுமார் 500 கோடிக்கும் மேல் செலவிட்டு இந்த படத்தினை எடுத்து வருகிறார்கள் என கூறப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் என்பதால் அதற்காக ரசிகர்களும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
வியாபாரம்
படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒன்றரை மாதத்திற்கும் மேல் இருக்கிறது. இருப்பினும் தற்போதே தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் வியாபாரம் முடிந்து இருக்கிறது.
பகுதி வாரியாக தியேட்டர் உரிமைகள் பிரித்து விற்றதில் 640 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு வந்திருக்கிறதாம். மேலும் ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றின் மூலமாக 425 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறதாம். அதனால் மொத்தம் 1000 கோடிக்கும் மேல் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் நடந்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
முழு விவரம் இதோ..
-
ஆந்திரா+தெலுங்கானா – 220 cr -
ஹிந்தி உரிமை – 200 cr - தமிழ்நாடு உரிமை – 50 cr
- கர்நாடகா – 30 cr
- கேரளா – 20 cr
- வெளிநாடு ரிலீஸ் உரிமை – 120 cr
-
ஓடிடி – 275 cr - இசை உரிமை – 65 cr
- சாட்டிலைட் – 85 cr
-
மொத்தம் – 1,065Cr