Thursday, July 25, 2024
Homeசினிமாபுஷ்பா 2 ரிலீஸ் தள்ளிப்போனது.. புது தேதி இதோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

புஷ்பா 2 ரிலீஸ் தள்ளிப்போனது.. புது தேதி இதோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்


அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே வெளியான போஸ்டர்கள், பாடல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகம் செலவு செய்து படக்குழு காட்சிகளை எடுத்து வருகிறதாம். பஹத் பாசிலுக்கும் இரண்டாம் பாகத்தில் அதிகம் முக்கியத்தும் இருக்கும் என தெரிகிறது.

புது ரிலீஸ் தேதி


ஆகஸ்ட் 15ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஷூட்டிங் முடியாத காரணத்தால் தற்போது படம் தள்ளிப்போய் இருக்கிறது.


இந்த வருடம் டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. படம் தள்ளிப்போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இருப்பினும் அந்த தேதியில் மற்ற பெரிய படங்கள் ரிலீசுக்கு வரிசைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments