Sunday, September 8, 2024
Homeசினிமாபெண்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள், ஆபாச உடை அணிந்து... சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி

பெண்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள், ஆபாச உடை அணிந்து… சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி


ஹேமா கமிட்டி

சில நாட்களுக்கு முன் மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் தாக்கம் தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான பேச்சாக உள்ளது. 

இதுகுறித்து பலர் பேச மறுத்தாலும் 80களில் முன்னணி நாயகிகளாக வலம் வந்த ராதிகா, குஷ்பு ரோகிணி, லட்சுமி ராமகிருஷ்ணன் என பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகை ராதிகா, கேரவனில் தனக்கு நடந்த விஷயத்தை பற்றி கூற அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.


சீரியல் நடிகை


இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை ரிஹானா, அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சினிமாவில் மட்டுமில்ல, எல்லா இடத்திலும் இருக்கிறது, ஆனால் சினிமாவில் வெளிப்படையாக தெரிகிறது.

யாரும் நேரடியாக எந்த பெண்கிட்டயும் வரியானு கேட்ட மாட்டார்கள்.

அப்படி கேட்டால் அந்த பெண் செருப்பால் அடிப்பாள், இதனால் ஆடிசன் வெச்சி அவர்களை அழைத்து பட வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஆசைக்காட்டி சில உப்புமா கம்பெனிகள் அழைக்கின்றனர்.

ஒருத்தன் கூப்பிடுறான் என்றால் அவர் ஏன் கூப்பிடுகிறான் நான் பெண்களைத்தான் தவறாக சொல்லுவேன். அவர்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள், ஆபாசமான உடைகளை அணிந்து வருகிறார்கள்.

எந்த உடை அணிந்தாலும் அதில் ஆபாசமில்லாதபடி பெண்கள் உடை அணிய வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

பெண்கள் தான் ஆண்களை கெடுக்கிறார்கள், ஆபாச உடை அணிந்து... சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி | Serial Actress Reehana About Womens Dressing

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments