Saturday, November 2, 2024
Homeசினிமாபெரம்பலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்! - லிஸ்ட் இதோ

பெரம்பலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்! – லிஸ்ட் இதோ


தமிழ்நாட்டு மக்களுக்கு சினிமாவுக்கு இருக்கும் பிணைப்பு எப்படிப்பட்டது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

டிவி, ஒடிடியின் ஆதிக்கத்தை தாண்டி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக தியேட்டர்கள் தற்போதும் இருந்து வருகின்றன.

பெரம்பலூர் தியேட்டர்கள்

தற்போது பெரம்பலூரில் இருக்கும் முக்கிய தியேட்டர்கள் பற்றி பார்க்கலாம்.

ராஜா சினிமாஸ்

எளம்பலூர் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அருகில் அமைந்திருக்கிறது இந்த தியேட்டர். சிவாஜி காலத்தில் இருந்தே கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த தியேட்டர் இருந்து வருகிறதாம்.

தற்போது பெரம்பலூரில் பெரிய ஹீரோ படங்களுக்கு முதலில் 5 ஷோ 6 ஷோ என அதிகாலை காட்சிகளை கொண்டு வந்தது நாங்கள் தான் என தியேட்டரின் உரிமையாளரே பெருமையாக பேசி இருக்கிறார். மெர்சல் படத்திற்கு தான் முதல் முறை 6 ஷோ போட்டதாக அவர் கூறி இருக்கிறார்.


LA ராம் சினிமா

பெரம்பலூர் எளம்பலூர் ரோட்டில், சாமியப்பா நகரில் அமைந்திருகிறது இந்த தியேட்டர். 4K Dolby ATMOS உடன் இருக்கிறது இந்த தியேட்டர்.

நல்ல ambience, பெரிய பார்க்கிங், சுத்தமாக இருக்கும் தியேட்டர் என அங்கு படம் பார்க்க சென்ற சினிமா ரசிகர்கள் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

பெரம்பலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்! - லிஸ்ட் இதோ | Best Theatres In Perambalur

LA கிருஷ்ணா சினிமாஸ்


பெரம்பலூர் ரோடு, வெங்கடேசபுரேம், சங்கு பேட்டையில் அமைந்திருக்கிறது இந்த LA கிருஷ்ணா சினிமாஸ்.


ஏசி இல்லை, சுத்தம் செய்வதில் குறைபாடு இருக்கிறது என அங்கு சென்றவர்கள் சிலர் விமர்சனம் சொல்லி இருக்கின்றனர்.

 

பெரம்பலூரில் இருக்கும் சிறந்த திரையரங்குகள்! - லிஸ்ட் இதோ | Best Theatres In Perambalur

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments