நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தனது கடைசி 69 -வது படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகி அரசியலில் ஈடுப்பட உள்ளார்.
இதன் காரணமாக, கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடல் வெளிவந்தது. அக்டோபர் 15ஆம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து கட்சியின் தலைவர் விஜய்யின் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
பெரியார் வழியில் விஜய்
இந்த நிலையில் இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள். இதில் பிரதமர் மோடிக்கு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார் விஜய்.
பெரியாரின் பிறந்தநாளில் அவரை போற்றும் வகையில் பெரியார் திடலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தற்போது, இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு ரசிகர்கள் பலர் அண்ணா & பெரியாரை இறுக பற்றி கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.