Saturday, December 7, 2024
Homeசினிமாபெரிய பொருட் செலவில் உருவாகும் படத்தில் நடிக்கும் ஆர் பாலாஜி.. இத்தனை கோடியா?

பெரிய பொருட் செலவில் உருவாகும் படத்தில் நடிக்கும் ஆர் பாலாஜி.. இத்தனை கோடியா?


ஆர் ஜே பாலாஜி

ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி, தற்போது பிரபல நடிகர், இயக்குனராக வலம் வருகிறார்.



இவர் கடந்த 2019 ம் ஆண்டு வெளியான LKG என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாகவும், அதில் திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இத்தனை கோடியா?




கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், ஆர் ஜே பாலாஜி ஒரு படம் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை பா ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கவுள்ளார்.



ஆர் ஜே பாலாஜி இதுவரை நடித்த படங்களிலேயே, அதிக பொருட் செலவில் உருவாகுவது இந்த படம் தானாம். கிட்டத்தட்ட ரூபாய் 16 கோடி செலவில் இப்படம் தயார் ஆகுவதாக தகவ்கள் வெளியாகியுள்ளன.    

பெரிய பொருட் செலவில் உருவாகும் படத்தில் நடிக்கும் ஆர் பாலாஜி.. இத்தனை கோடியா? | Rj Balaji Movie Latest Update

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments