Tuesday, February 11, 2025
Homeசினிமாபெற்றோர்கள் செயல் என்னை பாதித்தது.. ஸ்ருதி ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல்

பெற்றோர்கள் செயல் என்னை பாதித்தது.. ஸ்ருதி ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல்


ஸ்ருதி ஹாசன்

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து, பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக ஒரு பாடலில் நடித்து இருந்த நிலையில், லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் பேட்டி 

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரது பெற்றோர்கள் குறித்து சில அதிர்ச்சி விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், “கமல் ஹாசன் மற்றும் சரிகா போன்ற பெற்றோர்கள் இருப்பது எனக்கு பெருமை தான். ஆனால், என் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக இருந்திருக்கிறது.

பலரும் என்னை கமலின் மகள் என்று தான் குறிப்பிட்டார்கள் இருப்பினும் எனக்கென்று ஒரு சொந்த அடையாளம் வேண்டும் என்று நினைப்பேன்.

பெற்றோர்கள் செயல் என்னை பாதித்தது.. ஸ்ருதி ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல் | Shruti Haasan Talk About Her Father

அதன் காரணமாகவே என் அப்பா அம்மா பிரிந்த பின் மும்பைக்கு குடிபெயர்ந்தேன்.

என் தந்தையும், தாயும் பிடிவாதமான நபர்களாக இருந்தார்கள். அது என்னையும் என் தங்கையும் மிகவும் பாதித்தது” என்று கூறியுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments