மஞ்சும்மல் பாய்ஸ்
மலையாள இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் கடந்த 22 பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
சமீபத்தில் சவுபின் ஷாயிரின் என்பவர், “மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் 7 கோடி தலீடு செய்தேன். ஆனால் சொன்னபடி உரிய லாபத்தை கொடுக்கவில்லை” என்று தயாரிப்பாளர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
ஆபிஸ் ரிப்போர்ட்
இந்நிலையில் கேரள தயாரிப்பாளர் சங்கம், “பல்க் புக்கிங் செய்து, பார்வையாளர்களை கவர பொய்யான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பணத்திற்காக பொய்யான திரைவிமர்சனங்களை வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”.
“வசூலை அதிகமாக காட்டி ஒட்டுமொத்த திரைப்பட துறைக்கும் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற நடைமுறையில் ஈடுபட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர்.