பிக் பாஸ் சீசன் 8
ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் தொடங்கி உள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை எவ்வாறு விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்திருந்த நிலையில், நேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கையாண்டார் விஜய் சேதுபதி.
இந்த சீசன் பல ட்விஸ்ட்வுடன் தொடங்கிய நிலையில், இந்த முறை ஆண்கள் vs பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டின் நடுவில் கோடு போடப்பட்டு தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.
வெடித்த பிரச்சனை
இந்நிலையில், ஒரு பக்கம் டபுள் பெட்ரூம் செட்டப் மற்றும் இன்னொரு பக்கம் சிங்கிள் பெட்ரூம் செட்டப் இருக்க யார் எந்த பக்கம் போக வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று விஜய் சேதுபதி கூறினார்.
அதற்கு ஆண்கள் அணியில் இருந்து ரவீந்தர், சத்யா, தீபக் உள்ளிட்டோர் அவர்களுக்கு சிங்கிள் பெட் வேண்டும் எனவும், அதேபோல் ஆனந்தி, தர்ஷா குப்தா ஆகியோர் அதே கேட்க, கடுப்பான தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சற்று வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆரம்பத்தில் இதுபோன்ற சண்டை ஏற்படுவதால் இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக கலகட்டப்போவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.