Wednesday, March 26, 2025
Homeஇலங்கைபோதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் – தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை

போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் – தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை


இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 162,000 நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில் நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும், 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு இறுதியில் போதைப்பொருள் அடிமையாதல் குறித்து புதிய கணக்கெடுப்பை நடத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments