சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தான் சொந்தமாக நடத்தி வரும் கடைசியில் பெரிதாக லாபம் பார்க்கலாம் என நினைத்து ரூ. 4 லட்சத்தை ஏமாந்துவிட்டார்.
இந்த 4 லட்சத்தை இழந்த விஷயம் தனது மனைவி ரோஹிணிக்கு தெரிய கூடாது என நினைத்து தனது அம்மா விஜயாவிடம் சென்று மீனாவின் நகையை கேட்டு, அதனை அடகு வைக்கிறேன் என கூறி, விற்றுவிட்டார்.
அதிர்ச்சியில் முத்து, மீனா
இந்த சூழலில் முத்து மற்றும் மீனா இருவரும் தங்களது நகைகளை கேட்டு வருகின்றனர். அந்த சமயத்தில் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை கொடுத்துவிடுகிறார் விஜயா.
கவரிங் நகை என தெரியாமல் அதனை வைத்து புதிய நகை வாங்க செல்கிறார்கள், முத்து மற்றும் மீனா. ஆனால், நகை கடையில் இது கவரிங் நகை என தெரியவர முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள்.
இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் பொறுத்திருந்து பார்ப்போம்.