சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதல் படு ஹிட்டாக ஓளிபரப்பாகி வரும் தொடர் சிங்கப்பெண்ணே.
நிறைய புதுமுக நடிகர்களை வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு மக்கள் பேராதரவு கொடுக்கிறார்கள். வாரா வாரம் தொடருக்கான டிஆர்பி அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.
கிராமத்தில் இருந்து வந்த வெகுளியான அதேசமயம் பல விஷயங்களில் தைரியமாக நடக்கும் ஒரு பெண்ணாக ஆனந்தி கதாபாத்திரம் காண்பிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆனந்தி திருமணம் வரை சென்ற கதைக்களம் பரபரப்பாக ஓடியது.
பரபரப்பு புரொமோ
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் நந்தா போலீசிடம் அனைத்து விஷயங்களையும் கூறிவிட மித்ரா போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.
இன்னொரு பக்கம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்னை வந்த ஆனந்தி குடும்பத்தினர் ஊருக்கு கிளம்புகிறார்கள், மகேஷ் மற்றும் அன்பு இருவரும் ஆனந்தி பிறந்தநாளை கொண்டாடியதற்கு நன்றி கூறி கிளம்புகிறார்கள்.
இதோ மித்ரா கைதான புரொமோ,