Friday, September 13, 2024
Homeசினிமாபோலீஸ் ஆக வேண்டும் என கனவு.. ஆனால் தற்போது முன்னணி நடிகர்! யார் தெரியுமா?

போலீஸ் ஆக வேண்டும் என கனவு.. ஆனால் தற்போது முன்னணி நடிகர்! யார் தெரியுமா?


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டின் மிகவும் பிரியமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறியவர்.

இவரின் முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

முதலில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின்னர், தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள அவரது பயணம் உண்மையிலேயே பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒரு கதையாக அமையும்.



தன் தந்தையின் மறைவிற்கு பின், குடும்பத்திற்காக தனது வாழ்க்கை பாதையை மாற்றினார். கல்லூரியில் படிக்கும்போது அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னிடம் உள்ள திறமையை கண்டு பிடித்தாராம். அதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தாராம்.


இப்போது சினிமா துறையில் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும், அவரது பயணம் சவால்கள் மற்றும் விடாமுயற்சியால் நிரம்பியுள்ளது. பொறியியல் பட்டதரியான இவர் முதலில் தன் தந்தையை போல ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டுள்ளார்.

போலீஸ் ஆக வேண்டும் என கனவு.. ஆனால் தற்போது முன்னணி நடிகர்! யார் தெரியுமா? | Tamil Cinema Top Actor Dream To Became Police



அன்று பெரும் தோல்வியை கடந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் கொண்டு வருகிறார். இன்று இவர் ஒரு படத்துக்கு மட்டுமே ரூ. 20 முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் 



அவ்வாறு, தன் திறமையின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி. பல ரசிகர்களை கவர்ந்தவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, டாக்டர், டான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை நமக்கு கொடுத்து சினிமாவில் தன் திறமையை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் ஆக வேண்டும் என கனவு.. ஆனால் தற்போது முன்னணி நடிகர்! யார் தெரியுமா? | Tamil Cinema Top Actor Dream To Became Police

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments