வேட்டையன்
நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியிருக்கும் படம் தான வேட்டையன்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினியை அடுத்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டக்குபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கும் நிலையில் வியாபாரமும் சூடு பறக்க நடந்துள்ளது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. ரஜினியின் வேட்டையன் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை 1.2 மில்லியன் டாலர் கலெக்ஷன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.