விஜய்யின் கோட்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவரது படமா அப்போது கண்டிப்பாக லாபம் தான் என்ற எண்ணம் உள்ளது, படத்துக்கு படம் அதிக லாபம் காட்ட விஜய்யின் சம்பளமும் ரூ. 200 கோடியை தாண்டியுள்ளது.
தற்போது தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
எனவே படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த வண்ணம் உள்ளனர்.
ப்ரீ புக்கிங்
பல கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி செம ரீச் ஆனது. ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் கோட் படத்தின் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங் படு சூடாக நடந்து வருகிறது.
இதுவரை படம் அங்கு 1.2 மில்லியன் டாலர் கலெக்ஷன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.