விஜய்யின் கோட்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் பிரபலம்.
இவர் படம் வருகிறதா அப்போது கண்டிப்பாக அவரது படத்தை வாங்கலாம் என விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு படத்தை வாங்குவார்கள். அப்படி தான் விஜய் நடித்துள்ள கோட் படத்தை எல்லா ஏரியாக்களிலும் போட்டிபோட்டு வாங்கியுள்ளனர்.
வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது.
படக்குழுவினர் அனைத்து இடங்களுக்கும் சென்று படத்தை புரொமோட் செய்து வருகின்றனர்.
ப்ரீ புக்கிங்
தற்போது விஜய்யின் கோட் படத்தின் முதல்வார ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கண்டிப்பாக செம வசூல் வேட்டை செய்யும் என்பது ரசிகர்களின் பெரிய எண்ணமாக உள்ளது.