வேட்டையன்
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன்.
அவரை தாண்டி படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் அட்டகாசமான இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு வெளியானது.
வரும் அக்டோபர் 10ம் தேதி இப்படம் திரைக்கு வர ரசிகர்களும் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எமோஷ்னல் கலந்து ஒரு போலீஸ் கதையாக இப்படம் அமைந்திருக்கிறது.
ப்ரீ புக்கிங்
ரஜினி ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே அங்கு கூட்டம் கூடும், அதிலும் அவரது படம் ரிலீஸ் என்றால் சொல்லவா வேண்டும். தற்போது ரஜினி ரசிகர்கள் வேட்டையன் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.
ரஜினியின் வேட்டையன் படத்தின் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1.25 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.