GOAT
பெரிய நடிகர்களின் படம் வந்தாலே கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடக்கும். குறிப்பாக விஜய், அஜித், ரஜினி படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் இதுவரையிலான ப்ரீ புக்கிங் குறித்து வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் GOAT படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.