தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். நடிப்பதை தாண்டி தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பன்முக திறைமைகொண்டுள்ளார்.
பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளிவந்துள்ள திரைப்படம் தான் ராயன். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்து இப்படம் உலகளவில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ராயன் படத்தின் வெற்றி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் வெளியிட்டுள்ள பதிவு
இதில், “மக்கள், ப்ரீஸ் – மீடியா மற்றும் என்னுடைய துணையாக இருக்கும் தூண்கள் எனது ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இது என்னுடைய சிறந்த ப்ளாக் பஸ்டர் பிறந்தநாள் பரிசு. ஓம் நமசிவா” என கூறி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதோ..