வாழை
கடந்த மாதம் 23ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக பெற்று வந்தது. இந்த நிலையில், வாழை திரைப்படம் 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
10 நாட்கள் வசூல் விவரம்
அதன்படி, வாழை திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய வெற்றி படங்களின் வரிசையில் தற்போது வாழை படமும் இணைந்துள்ளது.
வாழை வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் பைசன். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.