Sunday, December 8, 2024
Homeசினிமாமகனின் திருமணத்திற்கு குக் வித் கோமாளி புகழ் இர்பானை அழைத்த நெப்போலியன்.. பத்திரிக்கையுடன் பிரபலம் கொடுத்த...

மகனின் திருமணத்திற்கு குக் வித் கோமாளி புகழ் இர்பானை அழைத்த நெப்போலியன்.. பத்திரிக்கையுடன் பிரபலம் கொடுத்த பரிசு


நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் 80, 90களில் கலக்கிய முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் நெப்போலியன்.

இவர் தமிழில் தொடர்ந்து நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டாலும் அமெரிக்காவில் செட்டில் ஆனவர் அங்கேயே இருக்கிறார், இந்தியா வருவது குறைவு தான்.

நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் தனது மனதிற்கு நெருக்கமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றை நிர்வகித்து வருவதோடு 3000 ஏக்கரில் விவசாய பண்ணை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

திருமணம்


தற்போது நெப்போலியன் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

அவரது மூத்த மகன் தனுஷிற்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. தனுஷிற்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் பிரபல யூடியூபர் இர்பானை சந்தித்து பத்திரிக்கை கொடுத்துள்ளனர்.

பத்திரிக்கையோடு வெள்ளி கிண்ணம் ஒன்றையும், நட்ஸ் அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் பரிசாக கொடுத்து வருகின்றனர். 

மகனின் திருமணத்திற்கு குக் வித் கோமாளி புகழ் இர்பானை அழைத்த நெப்போலியன்.. பத்திரிக்கையுடன் பிரபலம் கொடுத்த பரிசு | Napolean Invite Cwc Fame Irfan For Son Marriage

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments